Sunday 4 September, 2011

விநாயக சதுர்த்தி

விநாயக சதுர்த்தி என்பது  விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறதுஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது..


விநாயக சதுர்த்தி விநாயகரின் முக்கியமான விழாவாகும்.
சிலர் சுதந்திர போராட்டக் காலத்தில் தான் விநாயக சதுர்த்தி பாலகங்காதர திலகரால்  கொண்டாடப்பட்டிருக்கிறது என்று கூறுவார்கள்
 
ஆனால் இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது.
பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், வெள்ளையர்களுக்கு எதிராக  இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.

1 comment:

  1. நல்லபதிவு பகிர்வுக்கு நன்றி
    அன்புடன்
    SVR

    ReplyDelete